சாதி மல்லிப் பூச்சரமே -- Saadhi Malli Poocharame

 சாதி மல்லிப் பூச்சரமே -- Saadhi Malli Poocharame 

சாதி மல்லிப் பூச்சரமே சங்கத் தமிழ்ப் பாச்சரமே

ஆசையினா ஆசையடி அவ்வளவு ஆசையடி

என்னனு முன்னே வந்து கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ

காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம்

கன்னித் தமிழ் தொண்டாற்று அதை முன்னேற்று

பின்பு கட்டிலில் தாலாட்டு

சாதி மல்லிப் பூச்சரமே சங்கத் தமிழ்ப் பாச்சரமே

ஆசையினா ஆசையடி அவ்வளவு ஆசையடி

எனது வீடு எனது வாழ்வு என்று வாழ்வது வாழ்க்கையா

இருக்கும் நாலு சுவருக்குள்ளே வாழ நீ ஒரு கைதியா

தேசம் வேறல்ல தாயும் வேறல்ல ஒன்று தான்

தாயைக் காப்பதும் நாட்டைக் காப்பதும் ஒன்று தான்

கடுகு போல் உன் மனம் இருக்கக் கூடாது

கடலைப் போல் விரிந்ததாய் இருக்கட்டும்

உன்னைப் போல் எல்லோரும் என எண்ணோனும்

அதில் இன்பத்தை தேடோனும்

சாதி மல்லிப் பூச்சரமே சங்கத் தமிழ்ப் பாச்சரமே

ஆசையினா ஆசையடி அவ்வளவு ஆசையடி

உலகமெல்லாம் உண்ணும் போது நாமும் சாப்பிட எண்ணுவோம்

உலகமெல்லாம் சிரிக்கும்போது நாமும் புன்னகை சிந்துவோம்

யாதும் ஊரென யாரு சொன்னது சொல்லடி

பாடும் நம் தமிழ்ப்பாட்டன் சொன்னது கண்மணி

படிக்கத்தான் பாடலா நெனச்சுப் பாத்தோமா

படிச்சத நெனஞ்சி நாம் நடக்கத்தான்

கேட்டுக்கோ ராசாத்தி தமிழ் நாடாச்சு

இந்த நாட்டுக்கு நாமாச்சு

சாதி மல்லிப் பூச்சரமே சங்கத் தமிழ்ப் பாச்சரமே

ஆசையினா ஆசையடி அவ்வளவு ஆசையடி

என்னனு முன்னே வந்து கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ

காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம்

கன்னித் தமிழ் தொண்டாற்று அதை முன்னேற்று

பின்பு கட்டிலில் தாலாட்டு

-------------------------------------------------------------------------

Movie : Azhagan 

Actors : Mammootty, Bhanupriya, Geetha and Madhoo

Singers : S.P. Balasubramaniam

Music :  Maragadha Mani

Lyricist :  Pulamaipithan

Year : 1991

கருத்துரையிடுக

0 கருத்துகள்