எள்ளு வய பூக்கலையே ஏறெடுத்தும் பாக்கலையே

 எள்ளு வய பூக்கலையே

ஏறெடுத்தும் பாக்கலையே

ஆலால உன் சிரிப்பு கொத்துதய்யா

அச்சறுந்த ராட்டினம் போல சுத்துதய்யா


கொல்லையில வாழை இலை

கொட்டடியில் கோழி குஞ்சு

அத்தனையும் உன் முகத்தை சொல்லுதய்யா

ஆடும் மாடும் வெறும் வாயை மெள்ளுதய்யா


காத்தோட உன் வாசம்

காடெல்லாம் உம் பாசம்


ஊத்தாட்டம் உன் நினைப்பே ஊறுதய்யா

சால்சாப்பு வேணாம் வந்து நில்லய்யா

சாவையும் கூறு போட்டு கொல்லய்யா


கல்லாக நின்னாயோ

கால் நோக நின்னாயோ

கண்ணே நீ திரும்பி வரணும் வீட்டுக்கு


மல்லாந்து போனாலும்

மண்ணோடு சாஞ்சாலும்

அய்யா நீ பெருமை சாதி சனத்துக்கு


தலைச்சம் புள்ளை இல்லாம

சரிஞ்சது எத்தனை ஆட்சி

நீயே எங்க ராசா வா வா களத்துக்கு

தாயோட பாரம் மாசம் பத்தய்யா

தாங்காம நீயும் போனா தப்பய்யா


எள்ளு வய பூக்கலையே

ஏறெடுத்தும் பாக்கலையே

ஆலால உன் சிரிப்பு கொத்துதய்யா

அச்சறுந்த ராட்டினம் போல சுத்துதய்யா


வாள் ஏந்தி வந்தாலும்

வாழாம செத்தாலும்

கம்பீரம் குறைஞ்சிடாத

நெருப்பு நீ


அய்யோன்னு போனாலும்

ஆகாசம் போனாலும்

தண்ணீரை குளத்தில் சேர்க்கும்

வரப்பு நீ


உழைக்க எண்ணுற ஆளை 

உதைச்சி தள்ளுற ஊரை

கைய கால வெட்டி வீசும்

கருப்பு நீ


காட்டேரி உன்னை கண்டா ஓடாதோ

காப்பாத்த தெய்வம் வந்து சேராதோ


எள்ளு வய பூக்கலையே

ஏறெடுத்தும் பாக்கலையே

ஆலால உன் சிரிப்பு கொத்துதய்யா

அச்சறுந்த ராட்டினம் போல சுத்துதய்யா


கொல்லையில வாழை இலை

கொட்டடியில் கோழி குஞ்சு

அத்தனையும் உன் முகத்தை சொல்லுதய்யா

ஆடும் மாடும் வெறும் வாயை மெள்ளுதய்யா


காத்தோட உன் வாசம்

காடெல்லாம் உம் பாசம்


ஊத்தாட்டம் உன் நினைப்பே ஊறுதய்யா

சால்சாப்பு வேணாம் வந்து நில்லய்யா

சாவையும் கூறு போட்டு கொல்லய்யா




பாடல் : எள்ளு வய பூக்கலையே இசை : G.V. பிரகாஷ் குமார் பாடியவர் : சைந்தவி பாடலாசிரியர் : யுகபாரதி

கருத்துரையிடுக

0 கருத்துகள்