பூக்களே சற்று ஓய்வெடுங்கள்...அவள் வந்துவிட்டால்...அவள் வந்துவிட்டாள்...
ஹேய்... ஐ என்றால் அது அழகு என்றால் அந்த ஐ-களின் ஐ அவள் தானா?
ஹேய்... ஐ என்றால் அது கடவுள் என்றால் அந்த கடவுளின் துகள் அவள் தானா?
ஐயோ என திகைக்கும் ஐ என வியக்கும் ஐ-களுக்கெல்லாம் விடுமுறையை,
அவள் தந்துவிட்டாள்... அவள் வந்துவிட்டாள்!!!
இந்த உலகில் உன்னை வெல்ல ஒருவன் இல்லை... உந்தன் அசைவுகள் யாவிலும் ஐ.
வெளி அழகு கண்டு உன் இதயம் நுழைந்தும் என், ஐம்புலன் உணர்ந்திடும் ஐ.
இவன் பயத்தை அணைக்க அவள் இவனை அணைக்க, அவள் செய்கையில் பெய்வது ஐ.
அவள் விழியன் கனிவில் எந்தன் உலகம் பணியும், சிறு நோய்யளவும் ஐயமில்லை.
என் கைகளில் கோர்த்திடு ஐவிரலை... இனி தைத்திடு நீ வைத்திடு நம் நிழலை.
அவள் இதழை நுகர்ந்துவிட... பாதை நெடுக... தவம் புரியும்.
நீர்வீழ்ச்சி போலே நின்றவன், நான் நீந்த ஒரு ஓடை ஆனான்.
வான் முட்டும் மலையை போன்றவன், நான் ஆட ஒரு மேடை ஆனான்.
என்னுள்ளே என்னை கண்டவள், யார் என்று என்னை காண செய்தாள்.
கேளாமல் நெஞ்சை கொய்தவள், சிற்பம் செய்து கையில் தந்தாள்.
யுகம் யுகம் காண, முகம் இது போதும்.
புகலிடம் என்றே உந்தன், நெஞ்சம் மட்டும் போதும்.
மறு உயிர் தந்தாள், நிமிர்ந்திட செய்தாள்.
நகர்ந்திடும் பாதை எங்கும், வாசம் வீச வந்தாளே
பூக்களே சற்று ஓய்வெடுங்கள்...அவள் வந்துவிட்டால்...அவள் வந்துவிட்டாள்...
ஹேய்... ஐ என்றால் அது அழகு என்றால் அந்த ஐ-களின் ஐ அவள் தானா?
ஹேய்... ஐ என்றால் அது தலைவன் என்றால் ஐ-களின் ஐ அவன் தானா?
ஐயோ என திகைக்கும் ஐ என வியக்கும் ஐ-களுக்கெல்லாம் விடுமுறையை,
அவள் தந்துவிட்டாள்... அவள் வந்துவிட்டாள்!!!
------------------------------------------------------------------------------------
Movie : I
MUSIC : A.R.Rahman
Singers : Haricharan, Shreya Ghoshal
Lyricist: Madhan Karky
Year : 2014
0 கருத்துகள்